கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாத ஊராட்சி அலுவலகம்
செய்யூர், செய்யூர் அடுத்த அம்மனுார் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பழுதடைந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கிராம சேவை மைய கட்டடத்திற்கு, ஊராட்சி மன்றம் மாற்றப்பட்டு தற்போது செயல்படுகிறது.கிராம சேவை மையத்தில் போதிய இடவசதி இல்லாததால், 2021-- 22ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், 27 லட்சத்து, 17 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அமைக்கப்பட்டது.ஓராண்டுக்கு முன் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில்,தற்போதுவரை செயல்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது.ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.