பரனுார், ஆத்துார் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு நாளை முதல் திருத்திய புதிய கட்டணம் வசூல்
மாமல்லபுரம்:சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், வாகன சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, நாளை முதல் திருத்திய புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துஉள்ளது.சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, சுங்க கட்டண அடிப்படையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. சென்னை அடுத்த தாம்பரம் முதல், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வரை, ஒரு பிரிவாக உள்ளது. இப்பகுதி சுங்க கட்டண சாவடிகள், செங்கல்பட்டு அடுத்த பரனுார், அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் ஆகிய பகுதிகளில் உள்ளன. இத்தட சுங்க கட்டணம், நிதியாண்டுதோறும் உயர்த்தப்படும். அதன்படி தற்போது, 2025 - 26க்கு, நாளை முதல், 2026 மார்ச் 31ம் தேதி வரை கட்டணம் உயர்த்தப்பட்டு, புதிய திருத்திய கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
* பரனுார் சுங்கச்சாவடி கட்டணம் (ரூபாயில்):
வாகன வகை - ஒருமுறை பயணம் / ஒரே நாளில் சென்று திரும்ப / ஒரு மாதத்தில், 50 ஒரு முறை பயண, மாதாந்திர கட்டணம் / சுங்கச்சாவடி மாவட்ட பதிவு வர்த்தக வாகன ஒருமுறை பயணம்கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் - 75 / 110 / 2,500 / 35இலகுரக வர்த்தக வாகனங்கள் - 120 / 180 / 4,035 / 60பேருந்து, டிரக் - 255 / 380 / 8,455 / 125வர்த்தக வாகனங்கள் (மூன்று அச்சுகள்) - 275 / 415 / 9,220 / 140கனரக கட்டுமான இயந்திரங்கள், எர்த் மூவிங் உபகரணங்கள், பல அச்சுகள் (4 - 6 அச்சுகள்) வாகனங்கள் - 400 / 595 / 13,255 / 200பெரிய வாகனங்கள் (ஏழு அல்லது பல அச்சுகள்) - 485 / 725 / 16,140 / 240* ஆத்துார் சுங்க சாவடி கட்டணம்:வாகன வகை - ஒருமுறை பயணம் / ஒரே நாளில் சென்று திரும்ப / ஒரு மாதத்தில், 50 ஒரு முறை பயண, மாதாந்திர கட்டணம் / சுங்கச்சாவடி மாவட்ட பதிவு வர்த்தக வாகன ஒரு முறை பயணம்கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் - 75 / 110 / 2,435 / 35இலகுரக வர்த்தக வாகனங்கள் - 120 / 175 / 3,930 / 60பேருந்து, டிரக் - 245 / 370 / 8,240 / 125வர்த்தக வாகனங்கள் (மூன்று அச்சுகள்) - 270 / 405 / 8,990 / 135கனரக கட்டுமான இயந்திரங்கள், எர்த் மூவிங் உபகரணங்கள், பல அச்சுகள் (4 - 6 அச்சுகள்) வாகனங்கள் - 390 / 580 / 12,920 / 195பெரிய வாகனங்கள் (ஏழு அல்லது பல அச்சுகள்) - 470 / 710 / 15,730 / 235இரண்டு சுங்கச்சாவடிகளிலும், 20 கி.மீ., சுற்றுப்புற பகுதி, வணிக வகை அல்லாத வாகன மாதாந்திர கட்டணம் 350 ரூபாய். ஒரே நாளில், 24 மணி நேரத்திற்குள் திரும்பும் வாகன கட்டணத்தில் 25 சதவீதம், ஒரு மாதத்தில், 50 ஒருமுறை பயண, மாதாந்திர கட்டணத்தில், 33 சதவீதம் தள்ளுபடி சலுகையும் உண்டு.