மேலும் செய்திகள்
புறவழிச்சாலையில் நிழற்குடையின்றி பயணியர் அவதி
03-Jan-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், பயணியர் நிழற்குடை உள்ளது. இங்கு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், திருப்போரூர், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல, பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து, பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். ஆனால், நிழற்குடை பகுதியில், குடிநீர் வசதி இல்லாமல், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் ராட்டிணங்கிணறு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளில், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், தண்ணீர் வசதி இல்லாததால், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நகரில் உள்ள, பயணியர் நிழற்குடை பகுதியில், குடிநீர் வசதி ஏற்படுத்திதர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், செங்கல்பட்டு நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். பயணியர் நலன்கருதி, நிழற்குடையில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
03-Jan-2025