| ADDED : பிப் 21, 2024 11:48 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட விநாயகநல்லுாரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் மற்றும் வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில், புக்கத்துறை- -- வேடந்தாங்கல் மாநில நெடுஞ்சாலையில் நிழற்குடை அமைக்கப்பட்டது.அந்த நிழற்குடை, உரிய பராமரிப்பின்றி, கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழுந்துள்ளது.விரிசல் ஏற்பட்டு, அபாயகரமான நிலையில் உள்ள நிழற்குடையை சீரமைக்கக்கோரி, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சேதமடைந்துள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி, புதிதாக கட்டித்தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.