உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நீர்நிலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு

நீர்நிலை பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு

செங்கல்பட்டு:குளுத்தாஞ்சேரியில், கன மழையில் நெல் பயிர் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று முன்தினம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத்திடம், விவசாயிகள் சார்பில் சமூக ஆர்வலர் வாசுதேவன் அளித்த மனு வருமாறு:பாலுார் அடுத்த குளுத்தாஞ்சேரியில், 300 ஏக்கர் விவசாய நிலத்தில், நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழையில், நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏரியில் இருந்து மடுவு வரை கால்வாய் அமைக்க வேண்டும். நல்லதண்ணீர் குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கிராமத்தில் உள்ள மழைநீர் கால்வாய்களை துார் வாரி சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீது விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை