உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இருளர் இன மக்கள் பி.டி.ஓ.,விடம் மனு

இருளர் இன மக்கள் பி.டி.ஓ.,விடம் மனு

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சி, எடையான்குப்பம் இருளர் இன மக்கள், 20க்கும் மேற்பட்டோர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பி.டி.ஓ., அலுவலகம் வந்தனர்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டின் கட்டுமான பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. ஆனால், முழுமையாக பணிகள் முடிய விரைவில் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வெளியேற தற்காலிக வடிகால்வாய் அமைக்க வேண்டும். குடியிருப்புக்கு நடுவே மின்சார கம்பி செல்வதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த கோரிக்கை மனுவை தண்டலம் ஊராட்சி தலைவர் ஆனந்தன், அப்பகுதி வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் முன்னிலையில், பி.டி.ஓ., பூமகள்தேவி, உதவி பொறியாளர் வசந்தராஜிடம் வழங்கினர்.கோரிக்கை மனுவை பெற்ற பி.டி.ஓ., ஒன்றிய குழு தலைவர் இதயவர்மனிடம் மொபைல் போனில் பேசினார். அதற்கு ஒன்றிய குழு தலைவர் நேரில் பார்வையிட்டு பொதுநிதி அல்லது தொண்டு நிறுவனம் வாயிலாக கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை