மேலும் செய்திகள்
குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்த வேண்டுகோள்
30-Mar-2025
மதுராந்தகம்:லட்சுமி நாராயணபுரம் ஊராட்சியில் கூட்டம் நடத்த கோரி, துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.லட்சுமி நாராயணபுரம் ஊராட்சி, 9 வார்டு உறுப்பினர்களைக் கொண்டது. அதில், துணைத் தலைவர் மற்றும் 3, 4, 7, 9வது வார்டு உறுப்பினர்கள், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலரை, நேற்று சந்தித்து மனு அளித்தனர்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:லட்சுமி நாராயணபுரம் ஊராட்சியில், கடந்த மூன்று மாதங்களாக, மாதாந்திர கூட்டம் நடைபெறவில்லை. ஊராட்சி தலைவரும், செயலரும் வார்டு உறுப்பினர்களை புறக்கணித்து தன்னிச்சயைாக செயல்படுகின்றனர்.பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு இன்றி, இருள் சூழ்ந்து உள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.கூட்டம் நடைபெறாமல் இருப்பதால், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பற்றியும், குறைகளை கூறுவதற்கும், வாய்ப்பு இல்லாமல் உள்ளது. தன்னிச்சயைாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
30-Mar-2025