புறம்போக்கு நிலத்தை மீட்ககோரி வருவாய் துறை செயலரிடம் மனு
சேலையூர்:தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள புறம்போக்கு நிலத்தை மீட்டு, அரசு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என, வேங்கைவாசல் ஊராட்சி மக்கள், வருவாய் துறை செயலரிடம் மனு அளித்துள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:சேலையூரை அடுத்த வேங்கைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட, வேங்கைவாசல் பிரதான சாலையில் இயங்கும் தனியார் நிறுவனம், அரசுக்கு சொந்தமான 40 சென்ட் களம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் அமைத்து, வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தி வருகிறது.அதேபோல், 2 ஏக்கர் தரிசு நிலத்தையும் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது.அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு, அரசு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என, செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால், இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.