உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை போக்குவரத்து நெரிசல் தவிர்க்க போலீசார் சிறப்பு ஏற்பாடு

மாமல்லை போக்குவரத்து நெரிசல் தவிர்க்க போலீசார் சிறப்பு ஏற்பாடு

மாமல்லபுரம்:மாமல்லபுரம் நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சுற்றுலா பேருந்துகளை வெளிப்பகுதியில் நிறுத்த, போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.மாமல்லபுரம் கற்சிற்பங்களை ரசிக்க இந்தியர் மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியரும் அதிக அளவில் வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் கார், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். இந்த வாகனங்களை நிறுத்த, முறையான வாகன நிறுத்துமிடம் இல்லை. இதனால், சாலை பகுதிகளில் கண்ட இடங்களில் நிறுத்துவதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது.பள்ளிகளுக்கு விடுமுறையாக உள்ள தற்போது, தினசரி வாகனங்கள் அதிக அளவில் படையெடுக்கின்றன. இது ஒருபுறமிருக்க, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டிற்காக வரும் கர்நாடக பக்தர்களின் பேருந்துகளும், இங்கு ஏராளமாக குவிகின்றன.இதனால், பிரதான சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து முற்றிலும் முடங்குகிறது. இதை தவிர்க்க, சுற்றுலா பேருந்துகளுக்கு சிற்ப பகுதிகளில் அனுமதி தவிர்க்கப்பட்டு உள்ளது.குறுகிய நிறுத்துமிடங்களில் பேருந்துகள் நிரம்பிவிட்டால், அதன் பின் வரும் பேருந்துகளை நகரத்திற்குள் அனுமதிப்பதை தவிர்த்து, அணுசக்தி தொழில் வளாக சாலை, வெண்புருஷம் சாலை ஆகிய இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அங்கிருந்து பயணியர் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவற்றில் செல்லலாம். சாலை சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து, சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை