உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காவல் துறை கழிவு வாகனம் செங்கையில் வரும் 28ல் ஏலம்

காவல் துறை கழிவு வாகனம் செங்கையில் வரும் 28ல் ஏலம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, தற்போது உபயோகம் இல்லாத வாகனங்கள், வரும் 28ம் தேதி ஏலம் விடப்படுகின்றன.இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை அறிக்கை வருமாறு:செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட ஒன்பது காவல் வாகனங்கள் உள்ளன.இந்த வாகனங்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில், வரும் 28ம் தேதி காலை 11:00 மணிக்கு, பொது ஏலம் விடப்படுகிறது.ஏலம் எடுக்க விரும்புவோர், வரும் 27ம் தேதி மாலை 3:00 மணி வரை, வாகனங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவர். ஏலத்தில் பங்கேற்போர் வரும் 28ம் தேதி காலை 10:00 மணி முதல், காலை 11:00 மணிக்குள் ஏலம் விடுப்படும் இடத்தில், முன்பணமாக 1,000 ரூபாய் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். முன்பணம் செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி, 18 சதவீதத்தை, ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும், முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட நகலை ஏலத்திற்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ