உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மருவத்துாரில் பொங்கல் விளையாட்டு போட்டி

மருவத்துாரில் பொங்கல் விளையாட்டு போட்டி

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில், ஆதிபராசக்தி சித்தர்பீட பங்காரு அடிகளார், பாரதகவி பாரதியார, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் பிறந்தநாள் விழாக்கள் மற்றும் பொங்கல் விழாவையொட்டி, பல்வேறு விளையாட்டு போட்டிகள் மேல்மருவத்துாரில், நேற்று, நடந்தன.போட்டிகளை, மேல்மருவத்துார் ஊராட்சி மன்ற துணைத்தலைவரும், வழக்கறிஞருமான அகத்தியன், துவக்கி வைத்தார். கைப்பந்து, ஓட்டப்பந்தயம், குண்டு ஏறிதல், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்களை, ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் நிறுவன தலைவர் அன்பழகன் வழங்கினார்.போட்டியில், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 1, 200 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை