மேலும் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
02-Jun-2025
திருக்கழுக்குன்றம்:கருப்பாங்காடு கிராமத்தில் கற்பக விநாயகர், பொன்னியம்மன், முத்தாலம்மன், கங்கையம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா, நடைபெற்றது.திருக்கழுக்குன்றம் அடுத்த கருப்பாங்காடு கிராமத்தில், புகழ்பெற்ற கற்பக விநாயகர், பொன்னியம்மன், முத்தாலம்மன், கங்கையம்மன், ஸ்ரீனிவாசபெருமாள், பாலமுருகர், நவகிரஹ கோவில்கள் உள்ளன.பொன்னியம்மன் கோவிலுக்கு புதிய கோவில் கட்ட, கடந்தாண்டு திருப்பணி துவங்கியது. மற்ற கோவில்களுக்கும் திருப்பணி துவங்கியது. இப்பணிகள் சமீபத்தில் நிறைவுபெற்றன.கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி, மஹா கணபதி ேஹாமத்துடன் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. அதன் பின், நான்காம் கால பூஜையுடன் கலசங்கள் புறப்பட்டு, கோபுர கலசங்கள் மற்றும் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.அதன் பின், சுவாமிகள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
02-Jun-2025