உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பையனுாரில் தார்ச்சாலை அமைக்க பூஜை

பையனுாரில் தார்ச்சாலை அமைக்க பூஜை

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பையனுார் ஊராட்சி, சான்றோர் குடியிருப்பு பகுதியில் 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு மயானப்பாதை குறுகலாகவும், முட்செடிகள் அடர்ந்தும் உள்ளது. புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, நீண்டகாலமாக பகுதியினர் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.2 கி.மீ., நீளத்தில் புதிய தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக நடந்த பூமி பூஜை விழாவில், ஊராட்சி தலைவர் சுமிதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்