மேலும் செய்திகள்
கேபிள்கள் புதைக்கும் பணி: மோசமான மில்லர்ஸ் சாலை
14-Nov-2024
மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை, திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை.இந்த சாலையை பயன்படுத்தி, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, தங்களின் அடிப்படை தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில், கொண்டமங்கலம், தென்மேல்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், சாலை நடுவே பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையின் நடுவே, அதிக அளவில் பள்ளங்கள் உள்ளன. விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த சாலையை, அதிக அளவில் பள்ளி குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
14-Nov-2024