மேலும் செய்திகள்
மாம்பாக்கம் சுற்று பகுதியில் நாளை மின் தடை
28-May-2025
கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம், கானாத்துார் ஆகிய பகுதிகளில், 14 இடங்களில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, மறைமலை நகர் மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மறைமலை நகர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஹிராநந்தினி 33/11 கே.வி., துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கானாத்துார் 11 கே.வி., மின்னுாட்டியில், அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை நடக்க உள்ளன.இதனால், சினேகா கார்டன், பி.ஏ., ரோடு, வெங்கடேஷ்வரா கார்டன், முட்டுக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.அதுபோல், படப்பை 110/11 கே.வி., துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மாடம்பாக்கம் 11 கே.வி., மின்னுாட்டியிலும், அவசரகால பராமரிப்பு பணிகள், நாளை நடக்க உள்ளன.இதனால் பல்லாஞ்சேரி, லட்சுமிபுரம், ஈ.ஆர்.நகர், கார்த்திக் நகர், கன்னடப்பாளையம், சதாசிவம் நகர், காந்திஜி நகர், அண்ணா தெரு, பலராமபுரம், லலிதா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
28-May-2025