உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தனியார் வேலைவாய்ப்பு முகாம் 38 பேருக்கு பணி ஆணை

 தனியார் வேலைவாய்ப்பு முகாம் 38 பேருக்கு பணி ஆணை

செய்யூர்: செய்யூரில் நேற்று நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 38 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடந்தது. இதில், 72 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 262 பேரிடம் நேர்முக தேர்வு நடத்தின. இதில், 38 பேர் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணி ஆணைகளை, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை