மேலும் செய்திகள்
ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் அதிகாரிகள் அடம்
18-Sep-2024
பாகூர் ஏரியில் ஆக்கிரமிப்பு: நீர் வளம் பாதிப்பு
15-Sep-2024
பெருங்களத்துார்:பெருங்களத்துாரில், காமராஜர் நெடுஞ்சாலையை ஒட்டி பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சித்தேரி உள்ளது.பல ஏக்கர் பரப்பளவு உடைய இந்த ஏரியைச் சுற்றி ஆக்கிரமித்து, கட்டடங்களாக மாறிவிட்டன. இதனால், ஏரி பரப்பு குறைந்துவிட்டது.தவிர, சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பல ஆண்டுகளாக இந்த ஏரியில் கலந்து, தண்ணீர் மாசடைந்து, நிலத்தடி நீரும் கெட்டுவிட்டது.ஆகாயத்தாமரை, சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, ஏரி இருப்பதே தெரியாத அளவிற்கு மூடிவிட்டது.இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என, பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கத்தினர், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், ரோட்டரி கிளப் நிதி 55 லட்சம் ரூபாய் செலவில், 'எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்' என்ற தனியார் அமைப்பு, இந்த ஏரியை சீரமைக்கும் பணியை துவக்கியுள்ளது.ஏரிக்கரை சீமை கருவேல மரங்களை அகற்றி, நடைபாதை, சிறுவர் விளையாட்டு திடல், கண்ணை கவரும் பூ மற்றும் மூலிகை செடிகள், மூங்கில் நடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை முழுதுமாக அகற்றி சுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் மூன்று மாதங்களில் முடியும் என, நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
18-Sep-2024
15-Sep-2024