உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அண்ணியை வெட்டிய மைத்துனருக்கு காப்பு

அண்ணியை வெட்டிய மைத்துனருக்கு காப்பு

தாம்பரம்:தாம்பரம் அருகே, சரக்கு வாங்க பணம் தர மறுத்த அண்ணியை வெட்டிய மைத்துனரை, போலீசார் கைது செய்தனர்.மேற்கு தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர், கரிகாலன் தெருவைச் சேர்ந்தவர் கருப்பு என்கிற சந்தோஷ், 24.குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், சரக்கு வாங்க பணம் கேட்டு, குடும்பத்தினரிடம் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.நேற்று முன்தினம், தன் அண்ணியான சுப்ரியா, 27, என்பவரிடம் பணம் கேட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளார்.அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தோஷ், வீட்டில் இருந்த மரம் அறுக்கும் ரம்பத்தை எடுத்து, சுப்ரியாவின் தலை மற்றும் கைகளில் வெட்டி விட்டு தப்பிச் சென்றார்.இதுகுறித்த புகாரை விசாரித்த தாம்பரம் போலீசார், சந்தோைஷ நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி