உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமனாரை அடித்து கொன்ற மருமகனுக்கு காப்பு

மாமனாரை அடித்து கொன்ற மருமகனுக்கு காப்பு

கூடுவாஞ்சேரி : பாண்டூர் அடுத்த ஒத்திவாக்கத்தில் வசித்தவர் ஆறுமுகம், 65. இவரின் மகள் டில்லியம்மாள், கணவர் ஆனந்தனுடன் கன்னிவாக்கத்தில் வசித்து வந்தார். ஆனந்தன், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிகிறார்.தம்பதியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையால், டில்லியம்மாள் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.நேற்று முன்தினம், மனைவியை அழைத்து வருவதற்காக, ஒத்திவாக்கம் சென்ற ஆனந்தன், மாமனார் ஆறுமுகத்திடம் வாக்குவாதம் செய்தார். அப்போது ஏற்பட்ட தகராறில், அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து, ஆறுமுகத்தின் தலையில் ஆனந்தன் தாக்கியுள்ளார்.இதில் மயங்கி விழுந்த ஆறுமுகத்தை, அருகில் இருந்தோர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த காயார் போலீசார், ஆறுமுகத்தின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.தப்பி ஓடிய ஆனந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை