உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  எஸ்.ஐ.ஆர்., பணியிலிருந்து விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

 எஸ்.ஐ.ஆர்., பணியிலிருந்து விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் இருந்து விடுவிக்க கோரி, மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் தாலுகாவில் 200-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று, ரேஷன் கடையை உடனே மூடிவிட்டு, எஸ்.ஐ.ஆர்., தேர்தல் பணி செய்ய உடனடியாக மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் செல்லுமாறு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவித்து உள்ளனர். இதையடுத்து ரேஷன் ஊழியர்கள், ரேஷன் வினியோகம் முற்றிலுமாக முடக்கப்படும். மேலும், எஸ்.ஐ.ஆர்., தேர்தல் பணி குறித்து எதுவுமே தெரியாது. எனவே, இந்த பணியில் இருந்து ரேஷன் கடை பணியாளர்களை முழுமையாக விடுவிக்க வேண்டுமென, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா ரேஷன் கடை பணியாளர்கள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருப்போரூர் இதேபோல, எஸ்.ஐ.ஆர்., பணியிலிருந்து முழுமையாக விடுவிக்க கோரி, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் நேற்று, திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில் குவிந்து, மனு அளித்தனர். மனுவை பெற்ற வருவாய்த்துறை அதிகாரி கார்த்திக், மாவட்ட உயர் அதிகாரிக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை