உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

செங்கை குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பட்டா மாற்றம், வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்பின், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 16 பயனாளிகளுக்கு தலா 5,979 ரூபாய் மதிப்பில், விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு தலா 17,000 ரூபாய், ஈமச்சடங்கு உதவித் தொகை அளிக்கப்பட்டது.தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் வாயிலாக, நான்கு பயனாளிகளுக்கு, கல்வி உதவித்தொகையாக 82,400 ரூபாயும், திருமண உதவித்தொகையாக, மூன்று பயனாளிகளுக்கு தலா 20,000 ரூபாயும் வழங்கப்பட்டது.விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தாம்பரம் அரசு மருத்துவமனை, மேல்மருத்துார் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு, நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டன.மேலும், பதிவு செய்த ஐந்து பயனாளிகளுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. சுகாதாரம் சம்பந்தமாக ஓவியம் வரைந்த மூன்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை