உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பி.டி.ஓ., அதிரடி இடமாற்றம் திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு

பி.டி.ஓ., அதிரடி இடமாற்றம் திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக, லாவண்யா என்பவர், கடந்த சில மாதங்களாக பணியாற்றினார்.தன் நிர்வாகத்தில், ஒன்றியக்குழு முக்கிய பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க., பிரமுகர்களின் அழுத்தத்திற்கு, அவர் இடம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி, 'ஜல்ஜீவன்' ஆகிய திட்டங்களில் செய்யும் பணிகளை, வேண்டியவர்களிடம் அளிக்க முக்கிய பிரதிநிதிகள் வலியுறுத்தியதை தவிர்த்து, ஊராட்சி நிர்வாக பொறுப்பில் செய்ய அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.அவரை இடமாற்றம் செய்யக்கோரி உள்ளாட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தியும், கலெக்டர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இந்நிலையில், ஊரக வளர்ச்சி நிர்வாகம், அவரை அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய ஹரிபாஸ்கர், திருக்கழுக்குன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ