உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்மாற்றியில் குத்தாட்டம் குன்றத்துாரில் பரபரப்பு

மின்மாற்றியில் குத்தாட்டம் குன்றத்துாரில் பரபரப்பு

குன்றத்துார்: குன்றத்துாரில், மின்மாற்றி மீது உயிருக்கு ஆபத்தான வகையில் இளைஞர் ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.குன்றத்துாரில், திருநாகேஸ்வரம் கோவில் அருகே இளைஞர் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மின்மாற்றி மீது ஏறி, சுவாமி பாடல் பாடி குத்தாட்டம் போட்டுள்ளார். இதை அங்கிருந்த சிலர், மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.தற்போது, இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த இளைஞர் போதையில் நடனம் ஆடினாரா அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில், நடனம் ஆடும் போது, மின்சாரம் இருந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ