உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போலீஸ்காரர் மீது தாக்குதல் ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது

போலீஸ்காரர் மீது தாக்குதல் ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது

சென்னை : சென்னை, விருகம்பாக்கம், நடேஷன் நகரைச் சேர்ந்தவர் சேகர், 38. இவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிகிறார்.லோக்சபா தேர்தல் தொடர்பாக ஓட்டுப்பதிவு மையங்களை புகைப்படம் எடுக்க, நேற்று முன்தினம் மாலை நுாம்பல் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.நுாம்பல் எம்.ஜி.ஆர்., சிலை அருகே, ஒருவர் வழிவிடாமல் இருசக்கர வாகனத்தை நிறுத்திக்கொண்டு நின்றிருந்தார். அவரிடம் வழிவிடுமாறு சேகர் கூறினார்.ஆத்திரமடைந்த அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சேகரிடம் ஒருமையில் பேசியுள்ளார். மேலும், 'ஹெல்மெட்'டால் தாக்கினார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்தனர்.இதில், போலீஸ்காரரை தாக்கியது, நுாம்பல், கண்ணபிரான் தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் மோகன், 45, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை