உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இடுகாட்டில் ஆண் சடலம் மீட்பு

இடுகாட்டில் ஆண் சடலம் மீட்பு

பெரும்பாக்கம்:செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சக்திவேல், 29. குப்பை, பழைய பொருட்களை சேகரித்து விற்பவர்.இவர், மேடவாக்கம் அடுத்த, பெரும்பாக்கம் இடுகாட்டில் மின்சாரம் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.பெரும்பாக்கம் போலீசார் சென்று பார்த்தபோது, இறந்த நபரின் கையில் மின்சார ஒயர் சுற்றியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை