உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் ஒரகடத்தில் அகற்றம்

ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள் ஒரகடத்தில் அகற்றம்

திருப்போரூர், மே 18--ஒரகடம் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஐந்து குடிசை வீடுகளை வருவாய்த்துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினர்.திருப்போரூர் வட்டம், ஒரகடம் கிராமத்தில், சர்வே எண் 416 / 5எ ல் அரசுக்கு சொந்தமான 15 நிலத்தில், ஐந்து குடிசை வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, நேற்று மாலை 3:00 மணிக்கு, பையனூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சங்கிலி பூதத்தான் தலைமையில், ஒரகடம் கிராம நிர்வாக அலுவலர் மலர்கொடி, ஒரகடம் ஊராட்சி தலைவர் முன்னிலையில், ஆக்கிரமித்து கட்டப்பட்ட 5 குடிசை வீடுகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட இடத்தில் மதிப்பு 15 லட்சம் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி