| ADDED : டிச 03, 2025 06:10 AM
திருப்போரூர்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, காலவாக்கம் ஆறுவழிச்சாலை ரவுண்டானா பகுதியில், பழுதடைந்து இருந்த உயர்கோபுர மின் விளக்கு சரி செய்யப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய காலவாக்கம் முதல் ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய வெங்கலேரி வரை, ஆறு வழிச்சாலை 7.45 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட காலவாக்கத்தில் ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் ஆறு வழிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இது, கடந்த சில வாரமாக பழுதடைந்து இருந்தது. இந்த வழியாக கனரக வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மேற்கண்ட ஆறு வழிச்சாலை ரவுண்டானா பகுதியில் பழுதடைந்து இருந்த உயர்கோபுர மின் விளக்கு சரி செய்யப்பட்டது.