உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடியரசு தின மாநில பூப்பந்தாட்டம் மாமல்லை பள்ளிக்கு வெள்ளி

குடியரசு தின மாநில பூப்பந்தாட்டம் மாமல்லை பள்ளிக்கு வெள்ளி

மாமல்லபுரம்,குடியரசு தின மாநில பூப்பந்தாட்ட போட்டியில், மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவ அணியினர், வெள்ளி கோப்பை வென்றனர்.தமிழக பள்ளிக் கல்வித்துறை, 2024 - 25 பாரதியார் தினம், குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, மாநில அளவில் பள்ளிகள் இடையே விளையாட்டு, தடகளம் ஆகிய போட்டிகளை நடத்துகிறது.இதற்காக கல்வி வட்டாரம், மாவட்டம் அளவில், ஏற்கனவே போட்டிகள் நடத்தப்பட்டன. வெவ்வேறு வயது பிரிவுகளில், மாணவ - மாணவியர் பங்கேற்றனர். மாவட்ட போட்டிகளில் வென்ற அணியினர், தற்போது நடத்தப்படும் மாநில போட்டிகளில் பங்கேற்கின்றனர். செங்கல்பட்டு மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில், 17 வயது பிரிவு இறுதிப்போட்டியில், மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ அணியினர் முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் வென்றனர்.தற்போது, மதுரையில் நடந்த மாநில போட்டியில், மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி அணியினர் விளையாடி, இரண்டாமிடம் பிடித்து வெள்ளி கோப்பை வென்றனர். இவர்களுக்கு பயிற்சியளித்த, பல்லவர்கள் பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள், அணியினரை அனைவரும் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை