செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை
மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் செயல்பட்டு வருகிறது. ஏரி காத்த ராமர் கோவில் செயல் அலுவலர், மூன்று மாதங்களுக்கு முன், திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலுக்கு, செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.