உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சமுதாய நலக்கூடம் சீரமைக்க கோரிக்கை

சமுதாய நலக்கூடம் சீரமைக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. பேரூராட்சி பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.கடந்த, 2000 ல் பேரூராட்சி பொது நிதி வாயிலாக, தற்போது 4 -வது வார்டு பகுதியில் உள்ள கிராம அலுவலர் அலுவலகம் அருகே, சமுதாய நலக்கூடம் புதிதாக கட்டப்பட்டது.அதில்,பேரூராட்சி பகுதி மக்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், குறைந்த கட்டணத்தில், தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.தற்போது, கழிப்பறை பகுதி, சமையல் கூடம் மற்றும் உணவு அருந்துமிடம் போன்றவை மிகவும் சேதமாகி, மழை நீர் ஒழுகியது.இதனால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கடந்த ஓராண்டாக, சமுதாய நலக்கூடம் பூட்டப்பட்டு உள்ளது.இதனால், மதுராந்தகம், மேல்மருவத்துார் மற்றும் அச்சிறுபாக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில், அதிக கட்டணத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.இதனால், பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது.சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து தர கோரி, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளிக்கப்பட்டது.ஆனால், இதுவரை ஏதும் நடவடிக்கை இல்லை.எனவே, சமுதாய நலக் கூடத்தை சீரமைக்க, கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேரூராட்சி பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை