உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெடுஞ்சாலை பக்கவாட்டில் சமன்படுத்த கோரிக்கை

நெடுஞ்சாலை பக்கவாட்டில் சமன்படுத்த கோரிக்கை

அச்சிறுபாக்கம்,ஒரத்தியில் இருந்து திண்டிவனம் வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்த சாலையை அனந்தமங்கலம், வடமணிப்பாக்கம், சிறுதாமூர், தின்னலுார், வைரபுரம் உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.அதில், கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக, வடமணிப்பாக்கம் பகுதியில் உள்ள சிறிய பாலத்தின் மீது தண்ணீர் சென்றது. மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த விவசாயம் முற்றிலும் சேதமானது.நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிகமாக மண் கொட்டி சமன்படுத்தி, போக்குவரத்து ஏற்படுத்தினர். சாலை ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டதால், சாலையின் பக்கவாட்டில் பள்ளம் ஏற்பட்டு அபாயமாக உள்ளது.அதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், மிகுந்த அச்சத்துடன் பகுதியை கடந்து செல்கின்றனர்.எதிரே பேருந்து மற்றும் லாரி போன்ற வாகனங்கள் வரும்போது, சாலை ஓரம் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கி நிற்க முடியாத சூழல் உள்ளது. அந்தப் பகுதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது.ஆனால், சிறிய பாலம் உள்ளதால் தண்ணீர் விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறையினர், அப்பகுதியில் தண்ணீர் விரைந்து வெளியேறும் வகையில், நிரந்தர தீர்வாக பெரிய பாலம் அமைக்க வேண்டும். இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்.மேலும், சாலை ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில், மண் கொட்டி சமன்படுத்த வேண்டும்,என, இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை