உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிளாம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் கழிப்பறை அமைக்க கோரிக்கை

கிளாம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் கழிப்பறை அமைக்க கோரிக்கை

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், ஜி.எஸ்.டி., சாலையில், கழிப்பறை அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கத்தில், ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து முனையம், கடந்த இரு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில், செங்கல்பட்டு -- தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் அரசு பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளே செல்வதில்லை. மாறாக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன. இதனால், இந்த பேருந்து நிறுத்தத்தில் காலை முதல் இரவு வரை, பயணியர் கூட்டம் உள்ளது. எனவே, இந்த நிறுத்தத்தின் அருகே உள்ள அணுகுசாலையை ஒட்டி கழிப்பறை மற்றும் நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை