உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வடகால் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

வடகால் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

மறைமலை நகர்: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சி வடகால் கிராமத்தில், 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழில்.இந்த கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர்.இந்த பள்ளி வளாகத்தை சுற்றி, மூன்று பக்கங்களில் சுற்றுச்சுவர்கள் உள்ளன. மீதம் உள்ள ஒரு பக்கம், சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் திறந்தவெளியாக உள்ளது.இதன் காரணமாக, பள்ளி வளாகத்தில் கால்நடைகள், தெரு நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும், அருகிலேயே கிராம மக்கள் மாட்டுச் சாணம் உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவதாலும், கழிவு நீர் தேங்குவதாலும் நோய் தொற்றும் அபாயம் உள்ளதாக, குழந்தைகளின் பெற்றோர் அச்சப்படுகின்றனர்.எனவே, பள்ளிக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்து, விடுபட்ட பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ