மேலும் செய்திகள்
ஆதார் சேவை மையத்தில் தினமும் மக்கள் அவதி
23-Jul-2025
கூடுவாஞ்சேரி:நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் மையத்தில், பிற துறைகளின் சேவைகளை பெறும் வகையில், 'இ - சேவை' மையமாக மாற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, ஜி.எஸ்.டி., சாலையிலுள்ள நகராட்சி அலுவலகத்தில், மக்கள் பயன்பாட்டிற்காக ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. புதிய ஆதார் அட்டை விண்ணப்பித்தல், முகவரி, பெயர், மொபைல் போன் எண் மாற்றம் செய்தல் உள்ளிட்ட, ஆதார் அட்டை தொடர்பான அனைத்து சேவைகளும், இந்த மையத்தில் வழங்கப்படுகின்றன. அதிகமானோர் இந்த ஆதார் சேவை மையத்திற்கு வரும் நிலையில், இங்கு பிற துறைகளின் சேவைகளை பெறும் வகையில் 'இ - சேவை' மையமும் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில் வசிப்போர் மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த ஆதார் சேவை மையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ஆதார் அட்டை தொடர்பான சேவைகள் மட்டுமே வழங்கப்படும் நிலையில், அரசின் பிற துறைகள் தொடர்பான சேவைகளைப் பெற, தனியார் 'இ - சேவை' மையங்களை நாட வேண்டி உள்ளது. இதே நகராட்சி அலுவலகத்தில், ஆதார் சேவை மையத்துடன், ஒருங்கிணைந்த இ - சேவை மையத்தையும் துவக்கினால், ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் எளிதாக பெற முடியும். இதனால், மக்களுக்கு நேரம், அலைச்சல், பணம் மிச்சமாகும். எனவே, கூடுதல் பணியாளர்களை நியமித்து, இங்கு ஒருங்கிணைந்த இ - சேவை மையம் அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
23-Jul-2025