மேலும் செய்திகள்
அங்கன்வாடி கட்டடம் சேதம் குழந்தைகளுக்கு ஆபத்து
27-Oct-2025
செய்யூர்:கடப்பாக்கத்தில், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆலம்பரைக்குப்பம் செல்லும் சாலை ஓரத்தில் , அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய பள்ளி கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 17 குழந்தைகள் ஆரம்ப கல்வி படித்து வருகின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 28 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர். தற்போது அங்கன்வாடி மையம் செயல்படும் கட்டடம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஓடு போட்ட கட்டடமான இது பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகி, குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கடப்பாக்கத்தில் செயல்படும் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ள னர்.
27-Oct-2025