உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாழடைந்த பொது கழிப்பறை இடித்து அகற்ற வேண்டுகோள்

பாழடைந்த பொது கழிப்பறை இடித்து அகற்ற வேண்டுகோள்

மறைமலைநகர் : சிங்கபெருமாள்கோவிலில் உள்ள பாழடைந்த பொது கழிப்பறையை இடித்து அகற்ற வேண்டுமென, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவிலில் 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கோவில், பள்ளிகள், கடைகள் நிறைந்த ஊர். சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு இங்கு வந்து செல்கின்றனர். இங்கு அனுமந்தபுரம் சாலையில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், இலவச பொது கழிப்பறை கட்டப்பட்டது. இதை முறையாக பராமரிக்காததால், நாளடைவில் கட்டடம் சிதிலமடைந்து, சுவரில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்துள்ளன.எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதில் உள்ள இரும்பு கதவுகள் பெயர்ந்து, கீழே விழும் நிலையில் காணப்படுகின்றன. மோட்டார் மற்றும் மின் விளக்குகளுக்காக வழங்கப்பட்ட மின் இணைப்பு, தற்போதும் துண்டிக்கப்படாமல் உள்ளது.மழை காலங்களில் கட்டடம் முழுதும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. அங்காடி மையம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகே இதுபோன்ற சிதிலமடைந்த கட்டடம் இருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, இந்த கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை