உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சித்த மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் மருத்துவ மையம் ஏற்படுத்த கோரிக்கை

சித்த மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் மருத்துவ மையம் ஏற்படுத்த கோரிக்கை

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், 1982ம் ஆண்டு சிட்கோ தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது.இங்கு, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.பல்வேறு பகுதிகளிலிருந்து, 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து இங்கு வேலை செய்து வருகின்றனர்.இவ்வளாகத்தில், தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் இயங்கி வருகிறது.இங்கு மருத்துவர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். பல்வேறு வகை சித்த, ஆயர்வேத மருந்துகள் இங்கு தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இதனால், சிட்கோ வளாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நலன் கருதி, தொழிற்சாலை வளாகத்தில் ஒரு பகுதியில், சித்த மருத்துவ மையம் மற்றும் சித்த மருந்து விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சில நேரங்களில், இந்த சிட்கோ வளாகத்தில் உள்ள சில தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயன புகை மற்றும் துர்நாற்றத்தால், ஆலத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், பல்வேறு உடல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.எனவே, இவ்வாறான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு, மக்களின் நலன் கருதி, மேற்கண்ட சித்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் சித்த மருத்துவ மையம் மற்றும் மருந்து விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை