முள்ளிப்பாக்கம் பேருந்தை நீட்டிக்க கோரிக்கை
திருப்போரூர்:திருவான்மியூர்- ---- முள்ளிப்பாக்கம் இடையே இயக்கப்படும் பேருந்தை, பெரியவிப்பேடு வரை நீட்டிக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய முள்ளிப்பாக்கம் கிராமத்திற்கு, திருவான்மியூரிலிருந்து தடம் எண் 523 என்ற மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்து சோழிங்கநல்லுார், கேளம்பாக்கம், திருப்போரூர், கொட்டமேடு வழியாக முள்ளிப்பாக்கம் வருகிறது. முள்ளிப்பாக்கத்திற்கும் சின்னவிப்பேடு கிராமத்திற்கும் 3 கி.மீ., இடைவெளி உள்ளது. எனவே, தடம் எண் 523 பேருந்தை, பெரியவிப்பேடு வரை நீட்டித்தால், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு போக்குவரத்து எளிதாகும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.