உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தண்டரை சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

தண்டரை சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

பவுஞ்சூர்:தண்டரை கிராமத்திற்குச் செல்லும் சாலை சந்திப்பில் விபத்துகள் ஏற்பட்டு வருவதால், வேகத்தடை அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவுஞ்சூர் அடுத்த தண்டரை கிராமத்தில், செம்பூர் - சேவூர் செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையை தண்டரை, அணைக்கட்டு, செம்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். கல்பாக்கத்தில் செயல்படும் அணுமின் நிலையத்திற்கு, இந்த சாலை வழியாக தினமும் ஏராளமானோர் வேலைக்குச் சென்று வருகின்றனர். தண்டரை வள்ளலார் கோவில் அருகே, தண்டரை கிராமத்திற்குச் செல்லும் சாலை சந்திப்பு உள்ளது. இங்கு வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் எதிரில் உள்ள வயலில் கவிழ்ந்து, வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தண்டரை சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை