மேலும் செய்திகள்
வெள்ளகுளம் கழிப்பறையை சீரமைக்க கோரிக்கை
08-Sep-2025
சித்தாமூர்:புத்திரன்கோட்டை ஊராட்சியில், இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள பொது கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சித்தாமூர் அடுத்த புத்திரன்கோட்டை ஊராட்சியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது கழிப்பறை வசதி இல்லாமல், உபாதைகளை கழிக்க மகளிர் அவதிப்பட்டு வந்தனர். இதனால், இப்பகுதியில் கழிப்பறை அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து, 2022 -- -23ம் ஆண்டு 15வது நிதிக்குழு மானியத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, சமுதாய நலக்கூடத்தின் பின்புறத்தில் கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கழிப்பறை செயல்படாமல் பூட்டியே உள்ளது. இதனால், இப்பகுதி பெண்கள் இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் கழிக்க கடும் சிரமப்படுகின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், இந்த கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
08-Sep-2025