உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

செங்கை அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு பகுதிகளில், கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் இன்றி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு, தினமும் புறநோயாளிகள் பிரவில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டடர்கள் வந்து சிகிச்சை பெற்றுச்செல்கின்றனர். தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் புறநோயாளிகள் பிரிவுகளில், நோயாளிகளின் எண்ணிக்கைக்குகேற்ப, கூடுதலாக குடிநீர் வசதி செய்ய வேண்டும். என, நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி