உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கால்நடை மருத்துவமனையை சூழ்ந்த முட்செடிகளை அகற்ற கோரிக்கை

கால்நடை மருத்துவமனையை சூழ்ந்த முட்செடிகளை அகற்ற கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் கால்நடை மருத்துவமனையை சூழ்ந்துள்ள முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.அச்சிறுபாக்கம் மற்றும் சுற்றியுள்ள பள்ளிப்பேட்டை, காந்தி நகர், மேட்டு கிராமம் உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு, இங்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.தற்போது, இந்த மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது.மேலும், இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும், மர்ம நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, கால்நடை மருத்துவமனை வளாகத்தைச் சுற்றியுள்ள முட்செடிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்க, கால்நடைத் துறை மற்றும் அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ