மேலும் செய்திகள்
பகலில் தொடர்ந்து எரியும் விளக்குகளால் மின் இழப்பு
3 minutes ago
கொடூர் சாலையை சீரமைக்க வேண்டும்
3 minutes ago
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
4 minutes ago
குட்கா விற்ற வாலிபர் கைது
5 minutes ago
கூவத்துார்: கூவத்துார் ஊராட்சியில், மாசடைந்துள்ள உடையான் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செய்யூர் அருகே, கூவத்துார் ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள உடையான் குளம், பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. அருகே உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த குளத்தில் கலந்து வருகிறது. இதனால், குளத்து நீர் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் அதிகம் கலந்துள்ளதால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. மாசடைந்துள்ள குளத்தில் இருந்து அதிக அளவில் கொசு உற்பத்தியாகி, இரவு நேரத்தில் அப்பகுதி மக்கள் கொசுக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில், கூவத்துார் உடையான் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
3 minutes ago
3 minutes ago
4 minutes ago
5 minutes ago