உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வையாவூர் சமூக நலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை

 வையாவூர் சமூக நலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம்,':வையாவூர் ஊராட்சியில் உள்ள சமூக நலக்கூடத்தை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் தனியார் நிறுவனங்களில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், கருங்குழி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர். இதனால் அதிக செலவுடன், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. இங்கு, திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடச பெருமாள் கோவில் அடிவாரம் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த சமூக நலக்கூடம், தற்போது விரிசல் அடைந்து, பயன்பாடின்றி உள்ளது. எனவே, பழுதடைந்த இந்த சமூக நலக்கூட கட்டடத்தை சீரமைக்க, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி