உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயணியர் நிழற்குடை சீரமைக்க கோரிக்கை

பயணியர் நிழற்குடை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் இருந்து சித்தாமூர் வழியாக சூணாம்பேடு, செய்யூர் பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இதில், மாம்பாக்கம் பகுதியில் நகராட்சி தொடக்கப் பள்ளி அருகே, பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.இந்த நிழற்குடையில் இருக்கைகள் சேதமடைந்து உள்ளது. மேலும், பயன்படுத்த முடியாதவாறு சுகாதார சீர்கேடு அடைந்து உள்ளது. நிழற்குடை எதிரே, திறந்தவெளியில் கழிவுநீர் செல்வதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பயணியர் மரத்தடியில் பேருந்துக்காக காத்திருந்து, பயணம் செய்து வருகின்றனர்.எனவே, பயணியர் நிழற்குடை சீரமைக்கவும், கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை