உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓழலுாரில் மின்கம்பம் மாற்ற கோரிக்கை

ஓழலுாரில் மின்கம்பம் மாற்ற கோரிக்கை

செங்கல்பட்டு:ஓழலுாரில், விவசாய நில பகுதியில், புயல் வீசியதில் விழுந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், பெஞ்சல் புயல் வீசியதில், விவசாய நிலம், சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில், 630 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. அதன்பின், உடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில், மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த, ஓழலுார் ஊராட்சியில் விவசாய நிலப்பகுதியில், ஐந்து மின் கம்பங்கள் உடைந்து கீழே விழுந்துள்ளன. இந்த கம்பங்களை மாற்றி விட்டு, புதிய மின்கம்பங்கள் மாற்ற வேண்டும் என, கிராமவாசிகள், செங்கல்பட்டு மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'ஓழலுார் விவசாய நிலப்பகுதியில், மின்கம்பங்கள் உடைந்து விழுந்துள்ளன. இதில், மின் சப்ளை இல்லை. இதனால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. புதிய மின் கம்பங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி