| ADDED : பிப் 17, 2024 01:48 AM
கூடுவாஞ்சேரி:ஊரப்பாக்கத்தில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரியா நகர் ஒன்று, பிரியா நகர் விரிவு இரண்டு, பிரியா நகர் விரிவு மூன்று ஆகிய பகுதிகளில், சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில், ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.பிரியா நகர் விரிவு மூன்று பகுதியில், 45 அடி அகலமுள்ள சாலை, 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது, இச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதுகுறித்து பலமுறை ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவருக்கு புகார் அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.