உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியால் விபத்து அபாயம்

பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியால் விபத்து அபாயம்

சித்தாமூர்:சித்தாமூர் அருகே நேத்தப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட புலிக்கொரடு கிராமத்தில், அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, 20 குழந்தைகள் படிக்கின்றனர்.மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 30 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.அங்கன்வாடி மையம் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி நாளடைவில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, பழுதடைந்த காரணத்தால், புதிய குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளது.அங்கன்வாடி மையம் அருகே உள்ள பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளதால், இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றி, கூடுதல் குடிநீர் ஆதாரத்திற்காக புதிய மேல்நிலை தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை