உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கடம்பூர் சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்

 கடம்பூர் சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்

மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த கடம்பூர் சாலையில் அதிகளவில் மாடுகள் உலா வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மறைமலை நகர் - கலிவந்தபட்டு சாலை 5 கி. மீ., உடையது. இந்த சாலையை கடம்பூர், காயரமேடு, கூடலூர் உள்ளிட்ட கிராம மக்கள் மறைமலை நகர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். இந்த தடத்தில் எம்.118 என்ற மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த சாலையில் கடம்பூர் பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையை மறித்து படுத்து கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சில மாடுகள் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கின்றன. எனவே மாடுகளை பிடிக்க மறைமலை நகர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளை சாலையில் விடுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ