உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பவுஞ்சூரில் சாலை விரிவாக்க பணி

பவுஞ்சூரில் சாலை விரிவாக்க பணி

கூவத்துார்:மதுராந்தகம் அடுத்த, முதுகரை முதல், கூவத்துார் அடுத்த, கடலுார் வரை, நெடுஞ்சாலைத்துறை சாலை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், இத்தடம் ஒருவழியாக இருந்தது. நாளடைவில், மதுராந்தகம் - கூவத்துார் இடையே, வாகன போக்குவரத்து அதிகரித்ததால், இத்தடம் 7 மீ., அகல இருவழியாக மாற்றப்பட்டது. இப்பகுதியில் கல்குவாரிகள் இயங்குவதால், தற்போது கனரக லாரிகள் போக்குவரத்தும் அதிகரிக்கிறது.இச்சூழலில், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொலைவு பகுதி விரிவாக்கத்திற்கென, நிதி ஒதுக்கப்பட்டு, 10 மீ. அகல சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. தற்போது பவுஞ்சூர் பகுதியில், 1.8 கி.மீ., சாலையை, 10 மீ., அகலத்திற்கு விரிவுபடுத்தி, ஒரு பாலம் கட்டுவதாக, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி